விக்னேஷ் சிவனை எச்சரித்த இயக்குநர்.. ‘LIC’ படத்தால் வந்த சிக்கல்..!

0
92

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படம் ‘LIC’. இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. முன்னதாக விக்னேஷ் சிவன் AK 62 படத்தை இயக்க இருந்தார்.

ஆனால், அந்த வாய்ப்பை இழந்த விக்னேஷ், தற்போது இளம் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து படத்தை இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியா நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை எச்சரிக்கும் விதமாக இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் மீது வழக்கு தொடரவுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “மதிப்பிற்குறிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம். விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு ‘LIC’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன்.

காரணம் ‘LIC’ என்கிற பெயரை 2015ஆம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான ‘suma pictures’-ன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி எனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால், LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன்.

இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார். அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும்.

இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன். LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது.

இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அஜித் குமாரை வைத்து இயக்கவிருந்த நிலையில் அதில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக அந்த வாய்ப்பை விக்னேஷ் சிவன் தவறவிட்டார். இந்நிலையில், தற்போது அடுத்த பிரச்சினையாக ‘LIC’ படத்திற்கு வந்திருப்பதால் விக்னேஷ் சிவன் பெரும் சோதனையில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here