விஜய்க்கு தங்கையாக நடிக்க இருந்த இவானா நீக்கம்?.. இதெல்லாம் ஒரு காரணமா… காண்டான ரசிகர்கள்!

0
133

தளபதி விஜய்யின் 68ஆவது படத்தில் விஜய்க்குத் தங்கையாக நடிக்கவிருந்த இவானாவை இயக்குநர் வெங்கட் பிரபு படத்திலிருந்து நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிவருகிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு காட்சிகள் தீவிரமாகப் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தைப் பிரபலமான ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள். இதில், தளபதி விஜய்க்குத் தங்கையாக ‘லவ் டுடே’ கதாநாயகி இவானா நடிக்கவுள்ளதாகப் பேச்சு வெளியானது.

ஆனால், தற்போது அவரை படத்திலிருந்து இயக்குநர் வெங்கட் பிரபு நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவானா கதாபாத்திரமானது 15 வயதுடைய பள்ளி மாணவி எனவும் அந்த கதாபாத்திரத்திற்கு இவானா செட் ஆகாததால் அவரை படத்தில் இருந்து நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையறிந்த இவானா ரசிகர்கள், இவானா ஏற்கனவே பள்ளி மாணவி போல் தான் இருப்பதாகவும், இதனைக் காரணமாகக் கொண்டு இவானாவை படத்தில் இருந்து நீக்கியது வேதனையாக இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் இவானா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here