‘விடாமுயற்சி’ படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா..! பாடல்கள் கன்பார்மா ஹிட் தான்…!

0
50

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மங்காத்தா படத்துக்கு பின்னர் அஜித்துடன் அர்ஜுன் மீண்டும் இணைந்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

‘விடாமுயற்சி’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. முன்னதாக இவர் அஜித் நடித்த வீரம் திரைப்படத்திற்கு இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் இந்த பாடத்தை தொடர்ந்து தனது 63ஆவது படத்தை ‘மார்க் ஆண்டணி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here