‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து விலகிய பிரபலம்.. படப்பிடிப்பு ரத்தாகுமா?

0
87

Vidaamuyarchi Update: அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திலிருந்து முக்கிய பிரபலம் ஒருவர் திடீரென விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாக ஆரவ் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மங்காத்தா படத்துக்கு பின்னர் அஜித்துடன் அர்ஜூன் மீண்டும் இணைந்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திலிருந்து முக்கிய பிரபலம் ஒருவர் பாதியிலேயே படப்பிடிப்பை விட்டு விலகியிருக்கிறார்.

விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பின் போது இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார். அதுமட்டுமின்றி அஜித்துக்கு நெருக்கமானவர் என்பதால் விடாமுயற்சி படத்திலும் அவரே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

முதல் ஷெட்யூலில் பணியாற்றிய நீரவ் ஷா தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது ஷெட்யூலில் பணியாற்றவில்லை. அவருக்குப் பதிலாக ஓம் பிரகாஷ் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கனவே அறம், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், காஷ்மோரா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இது குறித்து விசாரித்ததில், நீரவ் ஷா விலகியதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் சொந்த காரணங்களுக்காகப் படத்தைவிட்டு விலகியிருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here