விவாகரத்து பெறவுள்ள ஐஸ்வர்யா ராய்..! என்ன நடந்தது?.. வீடியோவால் வெளிவந்த உண்மை..!

0
54

Aishwarya Rai Divorce issue: நடிகை ஐஸ்வர்யா ராய், தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ஒரு விடியோவால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்றளவும் ‘உலக அழகி’ என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ‘ஐஸ்வர்யா ராய்’ தான். இவர், பாலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். 2007ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். 16 ஆண்டுகாலமாக திருமண வாழ்க்கையை நடத்தி வந்த ஐஸ்வர்யா ராய் விவாகரத்து பெறவுள்ளதாக தகவல் வெளியாகியது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் தூம் 2 படத்தில் முதன் முதலில் ஒன்றாக நடித்தனர். அப்போது, இருவரும் காதல் வயப்பட்டனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்ட நிலையில் 2007ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் கூறப்படுவது, நடிகர் அபிஷேக் பச்சன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் குறித்தும் தனது குடும்பத்தினர் குறித்தும் பெருமிதம் பேசுவார். குறிப்பாக ஐஸ்வர்யா ராயின் ஒத்துழைப்பால் தான் தற்போது இந்த அளவிற்கு வேலை செய்து வருவதாக கூறினார்.

ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னாள் நடந்த நிகழ்ச்சியில் அவர் திருமண மோதிரம் அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த சில தினங்களாக அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தனது மனைவி குறித்து பேசுவதில்லை என்ற கருத்தும் உலா வருகிறது. மேலும், இருவரும் ஒன்றாக எந்த நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை எனவும் கூறப்படுகிறது. இவற்றைவைத்து இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவின.

இதற்கு அபிஷேக் – ஐஸ்வர்யா தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படாததால் ரசிகர்கள் இந்த தகவலை உறுதிபடுத்தினர். இந்த நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது அபிஷேக் பச்சனின் சகோதரி ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்தியா நந்தா, ‘தி ஆர்ச்சீஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

அதற்கான நிகழ்ச்சியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், இவர்களின் மகள் ஆராத்யா, நடிகர் அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன் என குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இதனால், ஐஸ்வர்யா ராயின் திருமண வதந்தி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here