வெளியானது ‘அயலா அயலா’ பாடல்..! ரசிகர்கள் வரவேற்பு..!

0
53

‘Ayalaan Song’: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அயலான்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘அயலா அயலா’ பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அயலான் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. ஏலியனை வைத்து ஒரு சுவாரசியமான நகைச்சுவை கதைக்களத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.

இந்த படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பு ரத்தானது. கிட்டத்தட்ட 50 நாட்கள் எடுக்கவேண்டிய காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்தது. மீதம் இருந்த அந்த காட்சிகளைப் படமாக்கி முடிக்க மூன்று வருடங்களாகியதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற விஷயங்கள் இருப்பதால் படம் திரைக்கு வர தாமதமானது. தொடர்ந்து, அயலான் பட வெளியீட்டுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து. இப்படிப் பல தடைகளைக் கடந்து ‘அயலான்’ திரைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து, ‘அயலான்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிச.20ஆம் தேதி ரிலீஸ் ஆகுவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டது. அதன்படி இன்று (டிச.20) ‘அயலான்’ திரைப்படத்தின் ‘அயலா அயலா’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. பல நாட்களாக ‘அயலான்’ படம் ரிலீஸ் விவகாரத்தால் ரசிகர்கள் சோகத்திலிருந்த நிலையில் இந்த அப்டேட்டைக் கேட்டு உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here