வெளியானது ‘பைட் கிளப்’ படத்தின் இரண்டாவது பாடல்..!

Raavanamavan Song: இயக்குநரும் நடிகருமான ‘விஜய்குமார்’ நடிப்பில் வெளியாகவுள்ள ‘பைட் கிளப்’ படத்தின் இரண்டாவது லிரிக் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

0
135

‘உறியடி’ விஜய்குமார் நாயகனாக நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் ‘பைட் கிளப்’. இந்த படத்தை அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

‘பைட் கிளப்’ படத்தை ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இந்த படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து ‘பைட் கிளப்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘யாரும் காணாத’ பாடலின் வீடியோ வெளியாகியது. அப்பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘பைட் கிளப்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘இராவணமவன்’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here