Malaikottai Vaaliban: மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில், மோகன்லால் நடித்திருக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது.
‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தை எதிர்பார்த்து மோகன்லாலின் ரசிகர்கள் நீண்ட காலமாகக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் மோகன்லாலின் ரசிகர்களுக்கு விருந்தாக ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் டீசர் வெளியானது. இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் மோகன்லால் ஆகியோரின் கூட்டணியின் இது முதல் திரைப்படமாகும்.
வரலாற்றுத் திரைப்படமான ‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் மிகப்பிரம்மாண்ட படைப்பாக வெளிவரவுள்ளது. ஹரீஷ் பெராடி, சோனாலி குல்கர்னி, மனோஜ் மோசஸ், டேனிஷ் சைட், கதா நந்தி, மணிகண்டன் ஆச்சாரி என பல முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ், மேக்ஸ்லேப் & சரேகமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
மேலும், இப்படம் மலையாளாம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இதற்காக அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் டப் செய்யப்பட்டுள்ளது. . ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்திற்கு வசனம் எழுதியவர், இதற்கு முன்பு லிஜோவுடன் ‘நாயகன்’, ‘ஆமென்’ படங்களில் பணியாற்றிய P S ரஃபீக் ஆவார்.
இப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். மேலும், மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. திரைப்படத்தை எதிர்பார்த்து மோகன்லாலின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.