வெளியானது ‘லவ்வர்’ படத்தின் முதல் பாடல்!.. ரசிகர்கள் வரவேற்பு!..

0
117

‘Lover’ : நடிகர் மணிகண்டன் ஹீரோவாக நடித்த ‘லவ்வர்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் மணிகண்டன் நடித்த ‘குட் நைட்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது ‘லவ்வர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்கிறார். மேலும், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படமானது கல்லூரி முதல் ஆறுவருடங்களாகப் பெண் ஒருத்தியைக் காதலித்து வரும் இளைஞருக்கும், அப்பெண்மணிக்கும் இடையில் இருக்கும் உறவுச்சிக்கலைப் பற்றி படம் பேசுகிறது.

இந்த படப்பிடிப்பின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான ‘விலகாத’ என்ற பாடல் இன்று வெளியானது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here