வெளியானது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் டிரைலர்!

0
266

Vadakkupatti Ramasamy: தமிழ் சினிமா ரசிகர்களிடம் ‘டிக்கிலோனா’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கார்த்திக் யோகி. இவரது இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.

இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்பட பல முன்னனி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும், இந்தப் படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

மேலும், ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் டிரைலர் ஜனவரி 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை வெளியாகவில்லை.

இந்த நிலையில், இன்று (ஜனவரி 12ஆம் தேதி) ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கமல்ஹாசனின் ‘KH237’ படத்தை இயக்கும் இரட்டை சகோதரர்கள்..! அதிரடி ஆக்‌ஷன் கன்பார்ம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here