‘வேட்டையன்’ அப்டேட்.. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்னணி நடிகர்கள்!

0
98

Vettaiyan Update: ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு தலைவர் 170 படத்தின் தலைப்பு வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ள நிலையில் சற்று தாமதமாக தற்போது படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 170ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக ‘தலைவர் 170’ எனப் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளன்று இப்படத்திற்கு ‘வேட்டையன்’ என அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

வேட்டையன் திரைப்படத்தில் ரஜினியின் மகனாக பகத் பாசில், அவரது மனைவியாக துஷாரா விஜயன் நடிக்கவுல்லதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும், வில்லனாக இப்படத்தில் ராணா நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here