ஷூட்டிங்கிற்கு லேட்டாக செல்லும் கவின்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

0
135

‘Actor Kavin’: நடிகர் கவின் தற்போது நடித்து வரும் ‘ஸ்டார்’ திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தாமதாக செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதற்கான காரணம் குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ‘கனா காணும் காலங்கள்’, ‘சரவணன் மீனாட்சி பகுதி – 2’, ‘தாயுமானவன்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் கவின். இவர் ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ என்ற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ்-ல் கலந்துகொண்ட நிலையில் மக்கள் மனதில் இடம் பித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிப் பிறகு ‘லிப்ட்’ என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் மக்கள் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த படம் ‘டாடா’. இந்தப் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பல இயக்குநர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் கதை கூற ஆரம்பித்தனர். நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்ட கவின் அடுத்ததாக ‘ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகினார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு “காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்” என்ற பாடல் வெளியானது. இந்த பாடலுக்கு ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். இந்தப் பாடலை இயக்குர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது, கவின் தற்போது நடித்து வரும் ‘ஸ்டார்’ திரைப்பட படப்பிடிப்புகளுக்கு லேட்டாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் தாமதமாக வருவதாக கூறப்பட்டது.

இதனையறிந்த நெட்டிசன்கள், சிம்புவைப் போல கவினும் அடிக்கடி ஷூட்டிங்கிற்கு லேட்டாக செல்வதாகவும், கவின் அடுத்த சிம்புவாக மாறிவிட்டதாகவும் கலாய்த்து வந்தனர். முன்னதாக, கவின் ‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது சம்பளத்தை அதிகரித்ததாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக செல்வதை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கவின் ‘ஸ்டார்’ படப்பிடிப்பிற்கு இயக்குநர் கூறும் நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக சென்றுவிடுவதாகவும், ஆனால், இயக்குநர் கவினை 3, 4 மணி நேரங்கள் தாமதமாகதான் அழைத்து படப்பிடிப்பை எடுப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மாலை 6 மணிக்கு ஷூட்டிங் முடிந்த நிலையிலும் கவினை வைத்து இரவு 10 மணி வரை ஷூட்டிங் எடுத்ததாக இயக்குநர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக தான் கவின் ஷூட்டிங்கிற்கு லேட்டாக செல்வதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: G.O.A.T டைட்டிலை மாற்ற படக்குழு திட்டம்..! டைட்டில் லீக் ஆனது தான் இதற்கு காரணமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here