ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ‘சூர்யா’.. வாடிவாசலால் ஏற்பட்ட சிக்கல்.. என்ன நடந்தது?

0
81

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில் இந்த ‘கங்குவா’ திரைப்படம் மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாய் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் வரலாற்றுச் சம்பந்தமான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அவைகள் கண்டிப்பா அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய விருந்தாக அமையும் எனவும் படக்குழு தெரிவித்திருந்தது. இதனாலேயே இந்த கங்குவா திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பு அமைந்திருக்கிறது.

சூர்யாவின் பிறந்தநாள் தினமான கடந்த ஜூலை 23ஆம் தேதி இப்படத்தின் க்ளிம்ப்ஸ் ரிலீஸ் ஆனது. இதனைத் தொடர்ந்து இப்படம் அடுத்த வருடம் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

ஹாலிவுட்டில் களம் இறங்கும் சூர்யா: இதனைத் தொடர்ந்து, வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புகள் 2024ஆம் ஆண்டு முதல் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதற்கிடையே ஒரு புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது. நடிகர் சூர்யா ஹாலிவுட்டில் களம் இறங்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், ஹாலிவுட் படத்தில் கமிட்டாகி விட்டால் இடையில் வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்கக் கூடாது என ஹாலிவுட் தரப்பிலிருந்து கட்டுப்பாடு போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், உடனடியாக வாடிவாசல் இயக்குநர் வெற்றிமாறனை அழைத்துப் பேசிய சூர்யா, ஹாலிவுட் வாய்ப்பு குறித்து எடுத்துக்கூறியிருக்கிறார்.

மேலும், வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டால் இதனை முடித்த பிறகு ஹாலிவுட்டிற்குச் சென்றுவிடுவதாக நடிகர் சூர்யா கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட வெற்றிமாறன் உடனடியாக ஓகே சொல்லியிருக்கிறார். மேலும், படப்பிடிப்பை மார்ச் மாதம் ஒரு பத்து நாட்கள் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார்.

சூர்யாவுக்கு ஏற்பட்ட சிக்கல்: சூர்யாவும் அதற்கு சரி என கூறியிருக்கிறார். ஆனால், சிக்கல் என்னவென்றால் அந்த 10 நாள்கள் படப்பிடிப்பும் நடிகரும் இயக்குநருமான அமீருடன் காம்பினேஷன் இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே பருத்திவீரன் விவகாரம் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது சூர்யாவும் அமிரூம் ஒன்றாக நடிப்பார்களா? என கேள்வி எழுந்துள்ளது.

மேலும், சூர்யா இதற்கு மறுப்பு தெரிவித்தால் படப்பிடிப்பு நடக்காது என்றும் உடனடியக சூர்யா ஹாலிவுட் படத்தில் நடிக்கச் சென்றுவிடுவார் எனவும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், ஹாலிவுட்டில் கால் பதிக்கும் சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக் கூறி மகிழ்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here