‘ஹிட்லர்’ படத்தின் புதிய அப்டேட்.. முதல் பாடல் நாளை வெளியீடு..

0
94

விஜய் ஆண்டணி நடிப்பில் இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹிட்லர்’. இந்த படத்தில் ரியா சுமன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்ராஜ், கவுதம்மேனன், ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் தமிழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ராஜா மற்றும் சஞ்சய் குமார் இந்த இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார். நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘ஹிட்லர்’ படத்தின் முதல் பாடலான ‘டப்பாசு’ பாடல் நாளை (ஜனவரி 25) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here