‘ஹனுமன் பட டிக்கெட்டில் இருந்து ராமர் கோயிலுக்கு ரூ.5 நன்கொடையாக வழங்குவோம்’ – படக்குழு அறிவிப்பு!

0
115

ஹனுமன் படத்திற்காக விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு ரூ.5 நன்கொடையாக வழங்கப்படள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவில் உள்ள சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்காக ஹனுமன் படக்குழுவினர் நன்கொடை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்காக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ரூ.5 ராமர் கோயில் நன்கொடைக்காக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஹனுமன் திரைப்படத்தை பிரசாந்த் வர்மா இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ளார். மேலும் அம்ரிதா ஐய்யர், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹனுமன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார். இந்த விழாவில் ஹனுமன் படக்குழுவினர் அனைவரும் காலணி அணியாமல் கலந்துகொண்டனர். ஹனுமனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இவ்வாறு கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உச்சக்கட்ட கோபத்தில் வெங்கட் பிரபு.. ரணகளமாகும் ஷூட்டிங் ஸ்பாட்.. விஜய் தான் காரணமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here