திரையுலகில் நுழைந்து 12 ஆண்டுகள் நிறைவு: சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் வாழ்த்து..!

0
95

‘12 Years of Sivakarthikeyan’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர், 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, அவர் பல படங்களில் நடித்து பலரின் மனங்களை கவர்ந்தார்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் திரைத்துறையில் நுழைந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 12 ஆண்டுகளில், 20 படங்கள் நடித்திருக்கிறார்.

அவரது 21ஆவது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து பல படங்களில் நடிக்க இருக்கிறார். சினிமாவில் நுழைந்து 12 ஆண்டுகள் நிறைவு செய்த சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here