CM Stalin: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா சட்டசபையில் கூறியாதவது, “பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கவில்லை.
ஆகையால் வேறு சமூகத்தில் இருந்து இஸ்லாமியத்தை தழுவியிருக்கும் மக்களுக்கும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார். அப்போது அங்கிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி தற்போது, இஸ்லாமியத்தை தழுவும் மற்ற சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டும் 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசாணை பிறப்பித்துள்ளார்.
மேலும் அந்த அரசாணையில், “அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சாதி சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் இந்த அரசாணையின் படி செயல்பட உரிய அறிவுறுத்தல்களை வருவாய் நிர்வாக ஆணையர் வழங்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.