3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

0
65

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2024ஆம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு 3ஆயிரத்து 184 காவல் துறை மற்றும் சீருடை அலுவலகர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, சிறப்பாக பணியாற்றிய 3ஆயிரத்து 184 காவல் துறை, சீருடை அலுவலகர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here