4 மணி நேரத்தில் 4 லட்சம் பார்வையாளர்கள்.. வெளியான “காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்” பாடல்..! யுவன் ரசிகர்கள் உற்சாகம்!

0
122

நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் “ஸ்டார்” என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் கவினுடன் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை எழில் அரசு மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பிரதீப் இ செய்துள்ளார்.

இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கும் ஸ்டார் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டார் படத்தின் “காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ்” என்ற பாடல் வெளியானது.

இந்தப் பாடலை இயக்குர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இப்பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. மேலும், யுவன் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் வெளியாகி நான்கு மணிநேரத்தில் 4 லட்சம் பார்வையாளர் கண்டு ரசித்து டிரெண்டிங்கில் 6ஆவது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here