‘5 மொழிகளில் டப்பிங் செய்வது இதுவே முதல் முறை’.. நடிகர் பிரித்விராஜ் நெகிழ்ச்சி!

0
150

ஒரே கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் டப்பிங் செய்வது இதுவே முதல் முறை என நடிகர் பிரித்விராஜ் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கேஜிஎப் திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார். நடிகை சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியது.

இந்நிலையில், தற்போது ‘சலார்’ படத்தின் டப்பிங் முடிவடைந்துள்ளதாக பிரித்விராஜ் தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “சலார் படத்தின் இறுதிகட்ட டப்பிங் திருத்தங்கள் முடிந்தன. பல ஆண்டுகளாக நான் பணியாற்றிய பல்வேறு மொழிகளில் எனது அனைத்து கதாபாத்திரங்களுக்கும் எனது சொந்தக் குரலை கொடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்னுடைய சில கதாபாத்திரங்களுக்கு பல மொழிகளில் டப்பிங் பேசியிருக்கிறேன்.

ஆனால் ஒரே கதாபாத்திரத்திற்கு ஒரே படத்தில் 5 மொழிகளில் டப்பிங் பேசுவது இதுவே முதல் முறை. தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் ஒரு படத்திற்காக பேச வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வருகிற 22ஆம் தேதி தேவாவும் வரதாவும் உங்களை சந்திப்பார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here