Rotterdam Film Festival-ல் திரையிடப்பட்ட ‘விடுதலை’..! Standing ovation கொடுத்த ரசிகர்கள்..!

0
113

Rotterdam Film Festival: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் ‘விடுதலை’. இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் சூரி நடித்திருந்தார். மேலும், நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், இந்த படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவன், நடிகர் சேத்தன் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் விடுதலை திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் Rotterdam Film Festival-ல் விடுதலை படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து இரே பாகமாக வெளியிடப்பட்டது. தொடர்ந்து ‘விடுதலை’ படத்தை பார்த்துமுடித்த ரசிகர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று 5 நிமிடங்கள் Standing ovation கொடுத்து இயக்குநர் வெற்றிமாறனை வாழ்த்தியுள்ளனர்.

இது குறித்த வீடியோ ஒன்றை கலைப்புலி எஸ் தானு தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வெற்றிமாறன், நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோரது புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here