சலார் ரிலீஸ் தேதி மாற்றத்திற்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்… ஷாக் ஆன ரசிகர்கள்..!

0
70

சலார் படத்தின் தேதி தள்ளிவைத்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து சலார் பட தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சலார்’ திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். நடிகை சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை கேஜிஎப் திரைப்படத்தைத் தயாரித்த அதே ஹோம்பாலே பிலிம்ஸ் இந்த ‘சலார்’ படத்தையும் தயாரித்துள்ளது. ‘சலார்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது ‘சலார்’ படத்தின் டப்பிங் முடிவடைந்துள்ளதாக பிரித்விராஜ் தனது ‘X’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சலார் படத்தின் இறுதிக்கட்ட டப்பிங் திருத்தங்கள் முடிந்தன.

ஒரே கதாபாத்திரத்திற்கு ஒரே படத்தில் 5 மொழிகளில் டப்பிங் பேசுவது இதுவே முதல் முறை. தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் ஒரு படத்திற்காகப் பேச வேண்டும். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வருகிற 22ஆம் தேதி தேவாவும் வரதாவும் உங்களை சந்திப்பார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சலார் படத்திற்கு போட்டியாக ஷாருக்கானின் டங்கி படமும் வெளியாக உள்ளதால் இந்த பாக்ஸ் ஆபிஸ் மோதலில் வெல்லப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. சலார் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால், அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சலார் பட ரிலீஸ் தேதி செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டதன் பின்னணியை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீசாக இருந்த இப்படம் டிசம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டதற்கு ஜோதிடம் தான் காரணம் என சலார் பட தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் கூறி இருக்கிறார்.

செப்டம்பர் 29ஆம் தேதி நேரம் நன்றாக இல்லாததன் காரணமாகவே ஜோதிடம் பார்த்து டிசம்பர் 22ஆம் தேதியை தேர்வு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிலைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here