‘Siren – Jukebox’: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுஜாதா விஜய்குமார் தயாரிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் வெளியான ‘சைரன்’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். முன்னதாக இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களை கவரும் வகையில் அமைந்திருந்தன.
இந்த நிலையில், தற்போது ‘சைரன்’ படத்தின் மொத்த பாடல்களும் வெளியாகியுள்ளன. இந்த படம் வருகிற பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.