‘Rajinikanth’: இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டிலும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆந்திராவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ரஜினியின் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி பல்கலைகழத்தில் நேற்று மாணவர்களுடன் விழா நடைபெற்றது. அந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் ‘ஜப்பான்’ நாட்டைச் சேர்ந்த ‘கிபுகீ’ என்பவர் கலந்துகொண்டார்.
அப்போது, அவர் தான் ஒரு ரஜினி ரசிகர் என்றும் ரஜினிகாந்திற்காக பாடல் பாடுவதாகவும் கூறினார். தொடர்ந்து பின்னணி இசையுடன் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ என்ற பாடலை தமிழில் பாடி அசத்தியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த பாடலை பாடிய ‘கிபுகீ’ என்பரை ரஜினிகாந்த் நேரில் அழைத்துப் பாராட்ட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.