Actor Vijay: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் ‘The Greatest of all Time’. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், சினேகா மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் கை விரல் துண்டானதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது படத்தில் விஜய்யின் கைவிரல் துண்டாகும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக பிராஸ்தெடிக் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட போலி கை தான் தற்போது வைரலாகி வருகிறது.
அதிதீவிரமாக நடைபெற்று வரும் ‘The Greatest of all Time’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ஜூன் மாதம் ரிலீஸ் ஆகலாம் என கூறப்பட்டு வருகிறது. மருபுறம் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி வருகிறது.