ஸ்டார் பட இயக்குநருக்கு ஹைதராபாத்தில் நிலம்..! பரிசு வழங்கிய தயாரிப்பாளர்..!

0
79

Star Director Elan: இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் ‘ஸ்டார்’ படத்தின் ‘ஸ்டார் இன் தி மேக்கிங்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்ததாக சமீபத்தில் கவின் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியானது.

சமீபத்தில் கவின் லேடி கெட்டப்பில் நடனமாடி ஒரு புதிய பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் இயக்குநர் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,  “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு நிலத்தை பரிசளித்த எனது தயாரிப்பாளருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

அதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற மே 10ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது. உங்கள் நம்பிக்கைக்கும் அன்புக்கும் நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here