சினிமாவுக்கு நோ சொன்ன அமீர் கான்.. மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்..!

0
146

Aamir Khan: ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகராகர்களுல் ஒருவர் அமீர்கான். தனக்கென ஒரு ஸ்டைலில் நடிக்கும் அமீர்கானுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் நடிப்பில் 2022ஆம் ஆண்டு ‘லால் சிங் சத்தா’ படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தொடர்ந்து அந்த படம் படுதோல்வி அடைந்தது.

இதனால் மன வேதனையில் இருந்த அமீர்கான் தற்காலிகமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக அமீர்கான் 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார். மேலும், அமீர்கானின் தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக அமீர்கான் சென்னையிலேயே தங்கி இருந்தார்.

இந்த நிலையில் அமீர்கான் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கும் ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தில் அவர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையைக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அமீர்கான் ‘லாகூர் 1947’ என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் சந்தோஷி இயக்குகிறார். மேலும், இந்த படத்தில் சன்னி டிவோல் ஹீரோவாக நடிக்கிறார்.

சினிமாவில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அமீர் கான் அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அவர் மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாமடைய செய்துள்ளது.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் இரு மொழிகளில் நடிக்கும் சமுத்திரக்கனி – வெளியானது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here