அஜித்தை இம்ப்ரஸ் செய்தது இப்படித்தான்..! வெளியானது ஆரவ்வின் ரகசியம்..!

0
91

Actor Ajith: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் விரைவில் முழு படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சமிப காலமாக நடிகர் அஜித் தனது நணபர்களுடன் சேர்ந்து பைக் டூர் சென்றிருக்கிறார். அவருடன் விடாமுயற்சி படத்தின் வில்லனாக நடிக்கும் ஆரவ்வும் சென்றிருக்கிறார். அஜித்தின் நட்பு வட்டாரங்கள் என்பது மிகவும் சிறியது.

மேலும், அவர் யாரையும் எளிதில் நம்பமாட்டார், நம்ப தகந்த நண்பர்களை மட்டும் தான் தன்னுடன் வைத்துக்கொள்வார். அப்படி இருக்க தற்போது ஆரவ்வை நடிகர் அஜித் தன்னுடனே வைத்திருப்பது சினிமா வட்டாரங்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அஜித்துடன், ஆரவ் எப்படி இந்த அளவிற்கு நெருக்கமாக மாறினார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, ஆரவ் ஒரு பைக் ரேஸர் என்பதால் பைக் சம்பந்தமாக நிறைய பேசியிருக்கிறார்.

அதன்படி அஜித்திற்கும், ஆரவ்விற்கு பல விஷயங்கள் ஒத்துப்போனதால் அஜித், ஆரவ்வை தன்னுடவே வைத்திருக்கிறார். மேலும், ஆரவ்விற்கு சமீபத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கையும் பரிசாக வழங்கியிருக்கிறார்.

யாரையும் எளிதில் நம்பாத அஜித், ஆரவ்வுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அவருக்கு வேண்டியதை அஜித் செய்து வருகிறார். பைக் ரேஸில் இருக்கும் ஆர்வம் தான் இருவரையும் ஒற்றுமையாக வைக்க காரணம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here