புதிய படத்தில் கமிட்டான நடிகர் ஆரி..! கதாநாயகி யார் தெரியுமா?..

0
91

‘Actor Aari Arujunan’: இயக்குநர் ராஜசேகரபாண்டியன் இயக்கத்தில் நடிகர் ஆரி கதாநாயகான புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த படத்தை மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கிறது. மேலும், படக்குழு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த இதர தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடிகை லக்ஷமி மேனன் நடிக்கிறார்.

முன்னதாக நடிகர் ஆரி சேரன் எழுதி, இயக்கிய வெப் சீரிஸ்- சேரனின் ஜர்னி-யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியான இந்த வெப் சீரிஸுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

இதையும் படிங்க: கொண்டாட்டத்தில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் குழு..! என்ன காரணம் தெரியுமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here