அரசியலில் குதிக்கும் நடிகர் அஜித்?.. பிரேமம் பட இயக்குநர் தகவல்!

0
112

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடிகர் அஜித் அரசியலுக்கு வரவுள்ளதாக கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் ‘நேரம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இவர் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றிப் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ‘கோல்டு’ திரைப்படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த படத்தின் தோல்விக்கு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தான் காரணம் என ரசிகர்கள் பலர் விமர்சித்தனர்.

முன்னதக இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது, இதனால் சினிமாவில் இருந்து விலகுகிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார். உடனடியாக அந்த பதிவை அவர் சிறிது நேரத்திலேயே நீக்கினார். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து, பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் அரசியலுக்கு வர உள்ளதாக சமூக வலைத்தளங்களில் அல்போன்ஸ் புத்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அந்த பதிவில் கூறியதாவது, “நான் அஜித்குமாரிடம் சொல்ல விரும்புவது. நிவின் பாலி, சுரேஷ் சந்திரா ஆகியோர் மூலமாக நீங்கள் அரசியலுக்கு வர இருப்பதாக கேள்விப்பட்டேன்.

உங்கள் மகள் அனோஷ்காவின் விருப்பத்தின் பேரில் ‘பிரேமம்’ படத்தில் நடித்த நிவின் பாலியை உங்கள் வீட்டுக்கு அழைத்து பேசிய பிறகு இதை நான் அறிந்தேன். ஆனால், இதுவரை எந்த அரசியல் கட்சிகளிலும் உங்களை பார்க்கவில்லை. அப்படியென்றால் என்னிடம் சொல்லப்பட்டது பொய்யா? அல்லது நீங்கள் அதை மறந்து விட்டீர்களா? இல்லை யாரேனும் உங்களுக்கு எதிராக இருக்கிறார்களா?.

இந்த மூன்றும் இல்லை என்றால் என்ன காரணம் என்பதை கடிதம் மூலம் பொது வெளியில் நீங்கள் விளக்க வேண்டும். உங்களை நான் நம்புகிறேன். மக்களும் நம்புகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய நடிகர் விஜய்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here