ராசி பார்த்து சம்பளம் வாங்கும் அஜித்?.. அடுத்த படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?..

0
107

நடிகர் அஜித் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் நடிகை ரெஜினாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பல்வேறு முன்னனி நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், விஷால், எஸ்,ஜே,சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்தை வைத்து இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி திரைப்படம் ரிலீசுக்குப் பின்னர், இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் படத்திற்கு அஜித் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு அஜித் 163 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாகவும், முன்பணமாக 25 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மைத்ரி தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தில் அஜித் வாங்கிய சம்பளத்திற்குப் பின்னாள் ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அஜித்திற்கு ராசியான நம்பர் 1 என்பதால் 163 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், நடிகர் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் நடிக்கவிருப்பதால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: இளம்பெண்ணை காதலிக்கும் பிரேம்ஜி..! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here