முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றிய அஜித்.. வைரலாகும் புகைப்படங்கள்..

0
110

Actor Ajith: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) ஒரே கட்டமாக 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்கள் ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

மேலும், அனைத்துக் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர், அந்த வகையில், முதல் ஆளாக நடிகர் அஜித் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் 6:45 மணிக்கே வாக்குச்சாவடி சென்று காத்திருந்து தனது வாக்கினை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here