நடராஜன் பர்த்டேவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்..!

0
128

Ajithkumar: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 4) நடராஜன் தனது 33ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனால் அவருக்கு ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக ஐதராபாத்தில் நள்ளிரவு நடராஜனின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் திடீரென வருகை தந்து நடராஜனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத நடராஜன் உற்சாகத்தில் துள்ளி குதித்துள்ளார். இதனையடுத்து நடிகர் அஜித் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here