‘இந்த படத்தில் நடித்ததை வாழ்நாளில் மறக்க மாட்டேன்’ – எமோஷனல் ஆன அக்ஷய் குமார்..!

0
84

Akshay Kumar: அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘படே மியன் சோட்டே மியன்’. இந்தப் படமானது படே மியன் சோட்டே மியன் இடையிலான தோழமை, அவர்களது வாழ்க்கை குறித்து பேசும் படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை ஜாக்கி பக்னானி தயாரிக்க, ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்குகிறது. இந்த படம் ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அக்ஷய் குமார் பேசினார்.

அவர் கூறியாதவது, “இந்த படம் எனது மனதுக்கு நெருக்கமான உணர்வை கொடுத்துள்ளது. இப்படத்தில் நான் முன்பு வெளியான படங்களை விட அதிக உழைப்பு, திறமையை வெளிக்காட்டி இருக்கிறேன்.

இந்த படத்தில் நடித்ததை என் வாழ்நாள் முழுதும் நான் மறக்க மாட்டேன். என்னைப் போன்று இந்தப் படம் ரசிகர்களையும் மகிழ்விக்கும்” என்றார். இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் வில்லனாக நடித்திருக்கிறார்.

இந்த ‘படே மியன் சோட்டே மியன்’ படம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி உலக அளவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்த நிலையில் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here