‘நான் கதாநாயகன் அல்ல; கதையின் நாயகன்’ – நடிகர் அப்புக்குட்டி!

0
75

Actor Appukutty: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுல் ஒருவர் அப்புக்குட்டி. ‘வெண்ணிலா கபடி குழு’. ‘சுந்தரபாண்டியன்’, ‘வீரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து, சிறிய வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த அப்புக்குட்டி ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து கதையின் நாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார். அதில், ‘வாழ்க விவசாயி’, ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ ஆகிய இரண்டு படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதில், இயக்குநர் பொன்னி மோகன் இயக்கியுள்ள படம் ‘வாழ்க விவசாயி’. இந்த படத்தை பால் டிப்போ கதிரேசன் தயாரிக்கிறார். இந்த படத்தில் விவசாயியாக நடிகர் அப்புகுட்டி நடிக்கிறார். இதில் அப்புக்குட்டி ஜோடியாக வசுந்தரா நடிக்கிறார்.

இந்த நிலையில், இந்த படம் குறித்து அப்புகுட்டி கூறியதாவது, ‘நான் எப்போதும் கதை நாயகன் தான், கதாநாயகன் அல்ல. எனக்கு பொருத்தமான கதைகளோடு இயக்குநர்கள் வருகிறார்கள்.

எனக்கு பொருந்தாத கதாபாத்திரங்களாக இருந்தால் நானே மறுத்து விடுகிறேன். கதை நாயகனாக நடித்தாலும் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் நடிப்பேன். விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here