பாஜகவில் இணைந்த நடிகர் அர்ஜூன்..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

0
112

Arjun met Modi: பிரதமர் மோடியை நடிகர் அர்ஜூன் நேரில் சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் என செய்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அர்ஜூன் பதில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி மூன்று நாள்கள் சுற்றுப் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

ஆளுநர் மாளிகையில், பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பிரதமரை நட்பு ரீதியாகவும், மரியாதை ரீதியாகவும் சந்தித்து பேசினர். அந்த வகையில், நடிகர் அர்ஜுனும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.

நடிகர் அர்ஜுன் திடீரென பிரதமர் மோடியைச் சந்தித்து பேசியதால், அவர் பாஜகவில் இணைந்து விட்டதாக செய்திகள் பரவின. இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அர்ஜுன், “பிரதமரை என்னுடைய கோவிலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். கூடிய விரைவில் கோவிலுக்கு வருவதாக அவர் கூறியிருக்கிறார்.

அர்ஜூன் கட்டிய கோவில்

இது ஒரு எதார்த்தமான சந்திப்பு தான். இப்போது தான், முதல் முறையாக மோடியை சந்திக்கிறேன். எங்களுக்கு ரொம்ப பிடித்த ஒரு மனிதர். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மோடியை பிடிக்கும். அவர் இன்று இங்கே வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் உங்களை சந்தித்தேன்” என்றார்.

தொடர்ந்து, பாஜகவில் இணைந்து விட்டதாக செய்திகள் பரவின அது உண்மையா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அர்ஜுன், ‘அப்படியெல்லாம் இல்லை, அரசியல் எனக்கு தெரியாது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘நடிகர் சங்க நிதிக்காக மொய் விருந்து நடத்த வேண்டும்’ – மன்சூர் அலிகான்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here