‘Journey of Mission Chapter 1’: மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

0
116

‘Journey of Mission Chapter 1’: இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘Mission Chapter 1 அச்சம் என்பது இல்லையே’. இப்படத்தில், நடிகை எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் சந்திப்.K.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இந்த படத்தை ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக உள்ளதாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து, நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் விஜய் ஆகியோர் பல்வேறு திரையரங்குகளுக்கு நேரடியாக சென்று ரசிகர்களிடம் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவை நடிகர் அருண் விஜய் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும், பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படங்களில் ‘Mission Chapter 1’ படம் தான் வெற்றியானது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த நடிகர் அர்ஜூன்..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here