Actor Arya: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் திவ்யதர்ஷினி. இவர் டிடி என செல்லமாக அழைக்கப்படுகிறார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சியில் வெளியான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் சினிமா பிரபலங்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து சினிமாக்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தனது நகைச்சுவையான மற்றும் துள்ளலான பேச்சினால் ரசிகர்களை கவர்ந்தவர்.
டிடிக்கு 2014ஆம் ஆண்டு அவரது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், பல்வேறு பிரச்சினையின் காரணமாக இருவரும் 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில், இன்று பிறந்த நாள் காணும் திவ்யதர்ஷினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ஆர்யா டிடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.
இது குறித்து ஆர்யா தனது ‘X’ தளத்தில், ‘பிறந்த நாள் வாழ்த்துகள் திவ்யதர்ஷினி. இனி வரும் காலம் சிறந்ததாக அமையட்டும்’ என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.