‘Congratulation Chellam’..! வரலட்சுமிக்கு ஆர்யா வாழ்த்து..!

0
150

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து, அங்கிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வரலட்சுமி – நிகோலஸ் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

மேலும், இவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும் எனவும் விரைவில் திருமண தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வரலட்சுமியின் தந்தை நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா மற்றும் குடும்பத்தினரும், நிகோலய் சச்தேவ் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வரலட்சுமிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ஆர்யா தனது ‘X’ தளத்தில் பதிவு இன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘வாழ்த்துகள் செல்லம்’ என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொட்ர்ந்து, வரலட்சுமிக்கு திரைப்பிரலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here