‘Mr.X லோடிங்’..! மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா..!

0
139

‘Mr.X’: நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘சார்பட்டா பரம்பரை’ இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதற்கிடையே நடிகர் ஆர்யா ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக், அனகா, உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், தாமஸ் இசையமைக்க, தன்வீர் நீர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக தற்போது கடும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்து வருகிறார்.

இது குறித்து ஆர்யா உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது மீண்டும் ஆர்யா தனது ‘X’ தளத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் நடிகர் ஆர்யா உடற்பயிற்சி செய்வதுபோலவும் அதில், ‘மிஸ்டர் எக்ஸ்’ லோடிங்.. எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here