‘இந்த மாதிரி ஒரு படம் வந்ததே கிடையாது’ – ஆர்யா புகழ்ந்து தள்ளியது எந்த படம் தெரியுமா?

0
111

Actor Arya: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஆர்யா பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். தற்போது ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில், இன்று ஆர்யா தனது ‘X’ தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ‘டபுள் டக்கர்’ படத்தின் நடிகர் மருத்துவர் தீரஜ் உடனிருந்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘தீரஜ் நடிக்கும் இரண்டாவது படம் இது, முக்கியமாக குழந்தைகளுக்காக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் வரும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்களும் அருமையாக உள்ளது. எனக்கு தெரிந்து இதுவரை தமிழில் இப்படி ஒரு அனிமேஷன் படம் வந்தது இல்லை. இந்த படத்தை குடும்பத்துடன் வந்து பாருங்க. எனக்கும் எனது குடும்பத்தினருக்கு படம் ரொம்ப பிடித்திருந்தது’ என்றார்.

தமிழ் சினிமாவில் ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தீரஜ். இவர் தற்போது மீரா மஹதி இயக்கத்தில் உருவாகும் ‘டபுள் டக்கர்’ படத்தில் நடிக்கிறார். தீரஜுக்கு ஜோடியாக ஸ்முரிதி வெங்கட் நடிக்கிறார்.

இந்த படத்தை ஏர் ஃபிளிக் தயாரிக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்களுடன், சினிமா நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் ஃபேண்டசி திரைப்படம் இதுவாகும். இந்தப் படத்திற்காகவே இரண்டு புதுமையான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த படத்தில் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here