தீவிர பயிற்சியில் ஆர்யா.,! ‘சார்பட்டா பரம்பரை 2’ விரைவில்..!

0
143

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, துஷாரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து மெகா ஹிட்டான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. 2021ஆம் ஆண்டு ஒடிடியில் வெளியான படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு மார்ச் மாதம் படக்குழு வெளியிட்டது. அதன்பின் படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் பா.ரஞ்சித் பிஸியாக இருப்பதால் இந்த படத்தை முடித்த பின்னர் ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது ‘தங்கலான்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்திற்கான குத்துச் சண்டைப் பயிற்சியில் நடிகர் ஆர்யா ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் பயிற்சி பெறும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here