நான் ரொம்ப சிக்கனமாக இருப்பேன்.. சோப்பு, ஷாம்பூ தீர்ந்தால் கூட இப்படி செய்வேன்.. ஓப்பனாக பேசிய மேகா ஸ்டார்.!

0
122

Actor Chiranjeevi: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, “எங்கள் வீட்டில் யாருமே சிக்கனமாக இருக்க மாட்டார்கள். வீட்டிலுள்ள அனைத்து லைட்டுகளையும் போட்டுவிட்டு சென்று விடுவார்கள். குளிப்பதற்காக போட்ட ஹீட்டரைக்கூட ஆஃப் பண்ண மறந்து விடுவார்கள்.

நான் தான் அதையெல்லாம் ஆஃப் செய்து வருவேன். இதனை மிடில் கிளாஸ் மென்டாலிட்டி என கூறுவார்கள். எனது வாழ்கையில் நான் எத்தனையோ மேடு பள்ளங்களை தாண்டி வளர்ந்து வந்திருக்கிறேன்.

இப்போதுக் கூட ஷாம்பூ தீர்ந்துவிட்டால் அந்த பாட்டலில் தண்ணீரை ஊற்றித்தான் பயன்படுத்துகிறேன். அதேபோல சோப் கரைந்து கடைசிக்கு வந்த பிறகு தான் புதிய சோப்பை பயன்படுத்துவேன்.

சினிமாவிற்கு வந்தபோது இவருக்கு சூப்பர் ஸ்டார்-னு நினைப்பு என்றெல்லாம் உதவி இயக்குநர்கள் என்னை பார்த்து ஏளனம் பேசி சத்தம்போட்டு சிரிப்பார்கள். அப்போது இருந்தே சூப்பர் ஸ்டார் ஆகியே காட்ட வேண்டும் என வெறியுடன் பணியாற்றினேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here