‘மதமும், கடவுளும் அரசியல்வாதிகள் கையில் சிக்குவது தீங்கை விளைவிக்கும்’ – நடிகர் கிஷோர் பதிவு..!

0
167

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலை பிரதமர் மோடி நேற்று பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாட்டை தொடங்கி வைத்தார்.

கோவில் திறப்பின் முதல் நாள் நாட்டின் முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, முன்னனி திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியர்ல் பிரமுகர்கள் மட்டும் பங்கேற்றனர்.

இந்த நிலையில், இதனை விமர்சித்து தென்னிந்தியாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம்வரும் கிஷோர் குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கோவில், மன்னர்கள் மற்றும் அரசியல் வைத்து கட்டுப்படுத்துவது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கே சென்றதாக உணர்கிறேன். கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து, மக்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

கோவில்களை கட்டி அதில் அவர்களின் பெயர்களை செதுக்கி வைத்துக்கொள்வது, கோவிலை கட்டியவர்களின் விரல்களை வெட்டுவது. வானுயர பேனர்களை வைத்து தங்களின் பெருமைகளை பேசிக்கொள்வது போன்ற செயல்கள் தற்போது வரை அழியாமல் தொடர்கிறது.

மதமும், கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும், அவர்களை கேள்விகேட்க முடியாத இடத்துக்கு எடுத்துச் செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாசாரத்திற்கும் எதிர்காலத்திற்கும் அது தீங்கு விளைவிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோவில்: இன்று ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here