தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்..

0
95

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கும் 50ஆவது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதனைத் தொடர்ந்து, அவரது 51ஆவது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்குகிறார்.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ‘லால் சலாம்’ அப்டேட்டை வெளியிட்ட விஷ்ணு விஷால்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here