பிரபல மலையாள நடிகையை தர்ஷன் மணம் முடித்தது உண்மைதானா?

0
99

Actor Darshan: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் தர்ஷன். இவர், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பித்தார்.

அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’, ‘அயலான்’ படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது தர்ஷனுக்கும் நடிகை அஞ்சு குரியனுக்கும் திருமணம் நடந்துவிட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மேலும், இதுகுறித்த ஒரு புகைப்படமும் வெளியானது. அதில், தர்ஷனும், அஞ்சு குரியனும் திருமண கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இந்த புகைப்படத்தைப் பார்த்தால் திருமணம் நடந்ததுபோல் இல்லை இது ஒரு நகை விளம்பரம் போல் உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here