செல்ஃபி எடுக்க வந்த ரசிகர் – தலையில் அடித்த விஜய் பட வில்லன்..

0
142

Jackie Shroff: ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜாக்கி ஷெராப். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இவர் நேற்று மும்பையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துக்கொண்டனர்.

அதில், ஒரு ரசிகர் ஜாக்கி ஷெராப் அருகில் நின்று செல்ஃபி எடுத்தார். அந்த ரசிகரின் தலையில் ஜாக்கி ஷெராப் அடித்து தள்ளி விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. வீடியோவில் பார்க்கும்போது, தன்னிடம் செல்ஃபி எடுத்த ரசிகரை செல்லமாக அடித்தது தெரியவந்தது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜாக்கி ஷெராப் வேண்டுமென்றே அவரை அடிக்கவில்லை என்றும் தனது ரசிகரை செல்லமாக தட்டி இந்த பக்கம் வந்து செல்ஃபி எடுத்துக்கொள்ளுமாறு கூறியதாக தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here