நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ‘ஜெயம் ரவி’ படம்?..

0
100

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள அடுத்த படம் பல்வேறு காரணங்களுக்காக திரையரங்குகள் வெளிவராமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களுல் ஒருவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் பல வெற்றிப்படங்கள் வெளிவந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் தோல்விப் படங்களே கொடுத்து வருகிறார்.

முன்னதாக அவர் நடிப்பில் வெளியான ‘இறைவன்’, ‘அகிலன்’ ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் சரிவர வரவேற்பு கொடுக்கவில்லை. இரண்டு படங்களுமே அவருக்கு தோல்வியை கொடுத்து விட்டன.

அதையடுத்து அவரது நடிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் படம் ‘சைரன்’. இந்த படத்தை ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருக்கார். மேலும், சுஜாதா விஜய்குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படம் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வர இருந்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக அப்போது வெளியாகவில்லை. இந்த நிலையில், தற்போது ‘சைரன்’ படத்தை வருகிற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஆனால், இந்தப் படம் திரையரங்குகளில் வெளிவராமல், நேராக ‘ஜி5’ ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ஜெயம்ரவி நடித்த 25ஆவது படமான ‘பூமி’ படத்தையும் ஓடிடி தளத்தில்தான் நேரடியாக வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சைரன்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்தாக, ‘தக்லைப்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘பிரதர்’, ‘தனி ஒருவன்- 2’ என பல படங்களில் நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க: ‘ரெமோ’ பட இயக்குநருடன் கைகோர்த்த எஸ்.ஜே.சூர்யா..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here