ஜெயம்ரவியின் பேக் டு பேக் ஷூட்டிங் அப்டேட்..!

0
130

JayamRavi: ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைரன்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேசுவரன் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சுஜாதா விஜய்குமார் தயாரித்தார். தொடர்ந்து, இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது ஜெயம் ரவி தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து, ஜெயம் ரவி இயக்குநராக படங்களை இயக்க இருக்கிறார். அவரிடம் மூன்று கதைகள் இருப்பதாகவும் அதில் ஒரு படத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில், ஜெயம் ரவி தற்போது ‘ஜீனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். காஷ்மீரில் இதற்கான படப்பிடிப்பு 40 நாட்கள் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து ‘காதிலிக்க நேரமில்லை’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் கடைசி 15 நாட்கள் மற்றும் மீதமிருந்த நிலையில் அதற்கான படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்த படம் மே மாதம் ரிலீஸாக உள்ளது.

தொடர்ந்து, தக் லைஃப் படத்தில் கமல் மற்றும் ஜெயம்ரவியின் காம்பினேஷன் காட்சிகள் 15 நாட்கள் படமாக்கப்படவுள்ளது. இவ்வாறு தொடர்ந்து படங்களின் பிஸியாக நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here