‘பெரும் காலத்தின் மனசாட்சியாக திகழ்ந்தவர் காந்தி’ – கமல்ஹாசன்..!

0
110

காந்தியடிகளின் 76ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தேச அளவில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த்தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 30ஆம் தேதி ‘தியாகிகள் தினம்’ ஆக அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், காந்தியின் நினைவை போற்றும் விதமாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சின் தலைவருமான கமல்ஹாசன் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம்.

அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘ஆபாசம் இல்லாத முத்த காட்சியில் நடிக்க தயார்’ – நடிகை மீனாட்சி சவுத்ரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here